Skip to main content

"பத்து பதினைந்து யானைகள் என்னை நோக்கி ஓடிவந்த போது..." ராணா பகிரும் காடன் பட அனுபவங்கள்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

Rana Daggubati

 

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'காடன்' திரைப்படம், மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கான விளம்பரப்படுத்துதல் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், படத்தின் நாயகன் ராணாவோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு..  

 

"காடன் படம் புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது. இரண்டு வருடமா காட்டுக்குள்ள ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தோம். இப்பதான் காட்டை விட்டு வெளியே வந்திருக்கிறோம். ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்தில் முடிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் தொடங்கினோம். ஆனால், காட்டுக்குள்ள போனதுக்குப் பிறகு தான் யானைகள் கூட ஷூட் பண்றது எவ்வளவு கஷ்டம்னு தெரியவந்தது. மொத்தம் 3 மொழில எடுத்திருக்கோம். இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறோம். பிரபு சாலமன் சார் கூட வொர்க் பண்ணது ரொம்ப வித்தியாசமா இருந்தது. முதல்ல தமிழ்ல எடுப்போம். டேக் ஓகே பண்ணிருவாரு. தெலுங்குல எடுக்கும் போது அதைவிட நல்லா பண்ணா மீண்டும் அதே மாதிரி நடிக்கச் சொல்லி தமிழில் எடுப்பார். சில நேரங்களில் என்ன மொழில எடுத்துக் கிட்டிருக்கோம்... என்ன மொழி பேசணும்கிறதையே மறந்துவிடுவேன். சில டயலாக் பேசும்போது தமிழ்ல ஆரம்பிச்சு தெலுங்குல முடிப்பேன். பிரபு சார்தான் நியாபகப்படுத்துவார். 'பாகுபலி' படத்தை விட இந்தப் படம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. முழுக்க முழுக்க காட்டுக்குள்ளயே எடுத்துருக்கோம். பார்ப்பதற்கு ஒரே காடு மாதிரி இருக்கும்; ஆனால், மொத்தம் 7 காடுகள்ல ஷூட் பண்ணோம். இந்த கெட்டப்ல நான் இருந்ததால் வேற எந்தப் படங்களிலும் இரண்டரை வருடங்களா நடிக்கல

 

ad

 

30 யானைகள் கூட எனக்கு 4 நாட்கள் பயிற்சி இருந்தது. 5-ஆம் நாள் நான் மட்டும் யானைகள் கூட காட்டுக்குள்ள போகனும். என் கூட ட்ரைனர் ஒருத்தர் வந்தார். போகும் போதே பையில் வாழைப்பழம் எடுத்துக்கொண்டு போவேன். ஒரு வேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யானைகளுக்கு அதைக் கொடுத்து அமைதிப்படுத்திரலாம்னு நினைத்தேன். அப்படி உள்ளபோகும் போது பையில் இருந்த வாழைப்பழத்தைப் பார்த்துவிட்டு பத்து பதினைந்து யானைகள் ஒரே நேரத்தில் என்னை நோக்கி ஓடி வர ஆரம்பிச்சுருச்சு. அந்த நேரம் பூமியே அதிருர மாதிரி இருந்தது. 

 

டேராடூன்ல ஏர்போர்ட் விரிவாக்கம் பண்ண ஆசிய யானைகள் இருக்கிற ஒரு இடத்தைக் காலி பண்ணப் போறாங்க. இப்படியல்லாம் நடக்கும்போது யானைகள் ஊருக்குள் புகுதல் மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும். வளர்ச்சி இருக்கலாம், ஆனால் இயற்கையை அழிச்சு இருக்கக்கூடாது. முன்பெல்லாம் நானும் இயற்கையைப் பத்தி நிறைய கவலைப்பட்டதில்லை. காடுனா இப்படி இருக்கணும்... இதெல்லாம் முக்கியம்னு எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்கல. நான் ஹைதராபாத்தில் வளர்ந்தவன். அங்கு காடே கிடையாது. இந்தப் படம் எனக்குப் பெரிய விழிப்புணர்வையே கொடுத்துருச்சு. சோலார் எனர்ஜி யூஸ் பண்ணும், பிளாஸ்டிக் யூஸ் பண்றத குறைக்கணும் என்பதையெல்லாம் என்னோட வீட்டிலும் அலுவலகத்திலும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளேன்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்