Skip to main content

யோ-யோ டெஸ்ட் மட்டும் போதுமா? - முன்னாள் பயிற்சியாளரின் அறிவுரை

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
yoyo

 

 

 

இந்திய அணியில் சேர வேண்டும் என்றால் ஒவ்வொரு வீரர்களும் யோ-யோ எனும் தகுதிச்சுற்றில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், சமீபத்தில் நல்ல ஃபார்மிலும், உடல்தகுதியுடனும் இருக்கும் ராயுடு, சாம்சன் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டவர் எரிக் சிம்மோன்ஸ். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருக்கிறார். யோ-யோ தேர்வுமுறை குறித்து பேசும் இவர், ‘இதை ஒரு பகுதியாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற தேர்வுகளோடு சேர்த்து இதையும் வைத்துக்கொள்ளலாமே தவிர, அதை முதன்மையாக்கக் கூடாது. என்னைப் பொருத்தவரை ஒரு விளையாட்டு வீரரை போட்டி நாள், சூழல், உணர்வு மற்றும் உடல்ரீதியிலான மாற்றங்கள் என எது வேண்டுமானாலும் பாதிக்கலாம். அதனால், வீரர்களை தொடர் பயிற்சியில் ஈடுபடுத்துவது மூலமே வெற்றியடையச் செய்வதற்கான அணியைத் தயார் செய்துவிடலாம்’ என கூறியுள்ளார்.
 

 

 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலில், ராயுடு, சாம்சன் போன்ற வீரர்கள் தகுதிபெறவில்லை. ஆனால், அணியில் யோ-யோ டெஸ்ட்டில் தேர்வான வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் என வீரர்கள் காயம் காரணமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பிட்னஸ் தேர்வில் செலெக்ட் ஆன வீரர்கள் ஏன் காயத்தால் திரும்பி வருகிறார்கள் என பிசிசிஐ தரப்பில் சர்ச்சை கிளம்பியுள்ளது.