13ஆம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் அதிகபட்ச விலையான ரூ.15.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கின்ஸ் அணி தனக்கு தேவையான நான்கு வீரர்களை ஏலத்தில் எடுத்தது. அதில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா ரூ. 6.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அவரை தொடர்ந்து சாம் கரன் ரூ.5.5ஒ கோடிக்கும், ஜோஷ் ஹேசல்வுட் ரூ 2 கோடிக்கும், ஆர் சாய் கிஷோர் ரூ. 20 லட்சத்திற்கும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
மிகவும் குறைந்தளவிலான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஏலத்தில் வீரர்களை வாங்க வேண்டிய கட்டயத்தில் இருந்த சென்னை அணி, மிகப்பெரிய தொகைக்கு போட்டிபோட்டுக்கொண்டு பியூஷ் சாவ்லாவை வாங்கியது. இதை சென்னை ரசிகர்கள் உள்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த முடிவு குறித்து சிஎஸ்கே அணியின் சிஈஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். மேலும் அணிக்குக் கூடுதலாக ஒரு லெக் ஸ்பின்னர் வேண்டும் என தோனி விரும்பினார். அதனால் தான் அணியில் ஏற்கனவே நிறைய சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் பியூஷ் சாவ்லாவை ஏலத்தில் தேர்வு செய்தோம் எனக் கூறியுள்ளார். எங்க தலைவன் எப்படி பயன்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் கரணையும் பயன்படுத்துவார், பியூஷ் சாவ்லாவையும் பயன்படுத்துவார்” என்றார்.