Published on 18/02/2022 | Edited on 18/02/2022

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி ட்ராபி போட்டிகள், நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது நாளிலேயே 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் சதமடித்து சாதித்தார்.
அதன் தொடர்சியாக, ஃபார்ம் இன்றி தவித்து வந்த ரஹானே சதமடித்து அசத்தினார். அதேபோல் இளம் வீரரான சர்பராஸ் கான், இரட்டை சதமடித்தார். இந்நிலையில் பீகார் அணிக்காக அறிமுகமான சாகிபுல் கனி, தனது முதல் போட்டியிலேயே முச்சதம் விளாசியுள்ளார்.
மிசோரத்திற்கு எதிரான போட்டியில் அவர், 2 சிக்ஸர்கள் மற்றும் 56 பவுண்டரிகளுடன் 405 பந்துகளில் 341 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் முதல் தர போட்டிகளில், அறிமுக ஆட்டத்திலேயே முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.