Skip to main content

"ஆரோக்கியம் சரியில்லை, உடல் முழுதும் வலித்தது" - கரோனா தொற்றுக்கு ஆளான அஃப்ரிடி...

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

dd


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். 
 


உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. பாகிஸ்தானில் இதுவரை 1.3 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2,500 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ள அவர், "வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக வலித்தது. நான் கரோனா சோதனை செய்துகொண்டேன். துரதிர்ஷ்டவசமாகச் சோதனை முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள், அஃப்ரிடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, அவர் விரைவில் மீண்டுவர வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.