Published on 15/05/2020 | Edited on 15/05/2020

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை இளவேனில் 'அர்ஜுனா' விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளவேனில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். அதன்பின்னர் சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தார், இளவேனில். இந்நிலையில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கும் அர்ஜுனா விருதுக்குத் தமிழக வீராங்கனை இளவேனில் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.