16 ஆவது ஐபிஎல் லீக் போட்டியின் 62 ஆவது லீக் போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்களையும் சுதர்சன் 47 ரன்களையும் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேக்ரோ ஜெனசன், ஃபரூக், நடராஜன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக க்ளாசன் 64 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியில் முகம்மது ஷமி 4 விக்கெட்களையும் மோஹித் சர்மா 4 விக்கெட்களையும் யஷ் தயாள் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்றைய போட்டியில் குஜராத் அணியில் கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து 145 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குஜராத் அணிக்காக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இணை என்ற சாதனையை கில் மற்றும் சாய் சுதர்சன் பெற்றனர். இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் குஜராத் அணிக்காக அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.