Skip to main content

சிக்கலை சந்திக்கப்போகும் மும்பை இந்தியன்ஸ், சி.எஸ்.கே அணிகள்?

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

rohit sharma

 

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம், சென்னையில் நாளை (18.02.2021) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 292 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். நாளை மாலை 3 மணிக்கு நடைபெறப்போகும் இந்த ஏலத்தை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

 

இந்தநிலையில் கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு வழக்கம்போல் இந்தியாவில் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஐ.பி.எல்லின் இரு முக்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

பாகிஸ்தான் அணி, ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணம் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. மேலும் இந்தத் தொடர் முடிந்து இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க வீரர்கள், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் வழக்கம் போல ஏப்ரல் மாதத்தில் தொடங்கினால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் டிகாக், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடும் ஃபாஃப் டூப்ளசிஸ், லுங்கி நிகிடி ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படலாம். இவர்கள் அந்தந்த ஐபிஎல் அணிகளின் முக்கிய வீரர்கள் என்பதால், அந்த அணிகளுக்குப் பின்னடைவாக அமையக்கூடும். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா, அன்ரிட்ச் நார்ட்ஜே ஆகியோரும் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படும்.