Skip to main content

இந்திய நாட்டின் ஹீரோ அவர்- ரிஷப் பந்த்

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

 

dho

 

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 11 கேட்சுகளைப் பிடித்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேக் ரஷல், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஏபி டீவில்லியர்ஸ் ஆகியோரின் உலக சாதனையைச் சமன் செய்தார். இது குறித்து ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் உள்ள இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

 

அதில் அவர், ''எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனிதான். பல்வேறு விக்கெட் கீப்பர்கள் அணியில் உருவாகவும் தோனிதான் காரணமாக இருந்தார். தோனி இந்திய நாட்டின் ஹீரோ. தோனியிடம் இருந்து கிரிக்கெட் வீரராக, தனி மனிதராக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எப்போழுதெல்லாம் தோனி என்னுடன் இருக்கிறாரோ அப்போது மிகவும் நம்பிக்கை உடையவனாக நான் உணர்வேன். மேலும் அடிலெய்ட் டெஸ்டில் இப்படி ஒரு சாதனையை நான் நிகழ்த்துவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், சில நல்ல கேட்சுகளைப் பிடித்திருக்கிறேன்” என கூறினார்.