Skip to main content

புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ் 2-வது வெற்றி

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ் 2-வது வெற்றி

புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - உ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் 18-க்கு 12 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி. அணி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து புள்ளிகளை வென்று அசத்தியது. 

ஆட்ட நேர முடிவில் 34-க்கு 33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய அஜய் தாக்கூர், பிரபஞ்சன் தலா 8 புள்ளிகளை பெற்றுத் தந்தனர். புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

சார்ந்த செய்திகள்