Published on 10/12/2020 | Edited on 10/12/2020
இந்திய அணி வீரர் பார்த்திவ் படேல், நேற்று அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார். இந்தநிலையில், இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் "டேலண்ட் ஸ்கவுட்டாக" (talent scout) இணைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில், டேலண்ட் ஸ்கவுட்டாக இருப்பவர்கள், இந்தியா முழுவதும் நடக்கும் போட்டிகளை, நேரில் பார்த்துத் தங்கள் அணிக்கு விளையாடத் திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணியில், டேலண்ட் ஸ்கவுட்டாக இருந்த, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜான் ரைட் தான், பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திவ் படேல், மும்பை அணிக்காக மூன்று சீசன்களில் விளையாடி, அவற்றுள் இரண்டு சீசன்களில் கோப்பைகளை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.