நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 205 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 206 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இந்த சீசனில் தனது 5 வது தோல்வியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கைகள் காட்டினார்.
![kkr replies csk about next match between the two teams](http://image.nakkheeran.in/cdn/farfuture/FeNgOZJzDqSLOq1HwrC-_QtSoByx3MZT64LrlsvjVjE/1554537646/sites/default/files/inline-images/DHONI_KARTHIK_-std.jpg)
அவரின் இந்த ஆட்டத்திற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஸ்ஸலை பாராட்டி சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தது. அதற்கு கொல்கத்தா அணி ஹர்பஜன் ஸ்டைலில் தமிழில் பதிலளித்திருந்தது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரஸ்ஸலை பாராட்டிய சென்னை அணியின் ட்வீட்டுக்கு "இன்னும் 3 நாள்ல மீட் பண்ணுவோம்" என தெரிவித்து ஸ்மைலி பொம்மை போட்டு கொல்கத்தா அணி பதிலளித்தது. இவ்விரு அணிகளும் வரும் 9 ஆம் தேதி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Moonu naal la meet pannalam ?@ChennaiIPL #CSKvKKR #KKRHaiTaiyaar https://t.co/I6s4pg25WT
— KolkataKnightRiders (@KKRiders) April 5, 2019