Published on 29/12/2018 | Edited on 29/12/2018

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று இந்திய அணி வலுவான நிலையில் வெற்றி வாய்ப்பை நெருங்கி வருகிறது. தனது இரண்டாவது இன்னிங்க்ஸை இந்திய அணி 106 ரன்களுக்கு டிக்ளர் செய்த நிலையில் 399 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த ஆஸ்திரேலியா இன்றைய ஆட்ட நேர முடிவில் 258 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகளே தேவைப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.