உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் குறைந்த போட்டிகளே உள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என பலரும் உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் யார் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், நட்சத்திர வீரர் கம்பீர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே உள்ளிட்டோர் கருத்து கூறியுள்ளனர்.
கடந்த சில தொடர்களாக உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளில் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளை ஒப்பிடும் போது இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. கலக்கலான டாப் ஆர்டர் பேட்டிங், ஓரளவு மிடில் ஆர்டர் பேட்டிங், மிரட்டும் ஸ்பின் பவுலிங், மாஸ் ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஜாகிர் கான் - முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்:
ரிஷப் பண்ட் அணியில் விளையாட வேண்டும். அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் மட்டுமே 15 பேர் கொண்ட அணியில் இருக்க வேண்டும். உலகக்கோப்பை தொடருக்கு நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்க வேண்டும்.
ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு/ தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல்/நான்காவது வேகப்பந்து வீச்சாளர்.
கம்பீர் – முன்னாள் இந்திய கிரிக்கெட்டர்:
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கம்பீர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் வீரர்கள் கூறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில் ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு பதிலாக அஸ்வின் அணியில் இடம்பெற வேண்டும். கடந்த ஒரு வருடமாக சஹால் மற்றும் குல்தீப் கூட்டணி சிறப்பாக பந்து வீசி வருகிறது. இருந்த போதும் அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னர், அனுபவம் வாய்ந்தவர், ஐ.சி.சி.தொடர்களில் அதிகம் விளையாடியவர். விக்கெட் எடுக்கும் திறன் கொண்டதால் அஸ்வின் அணியில் இடம்பெற வேண்டும்.
ஷிகார் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், , ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி, அஸ்வின், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ்.
ஹர்ஷா போக்ளே – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்:
ரோஹித் சர்மா மற்றும் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ராகுல் தற்போது சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் மாற்று தொடக்க ஆட்டக்காரராக உலகக்கோப்பை தொடரில் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ராயுடு நான்காவது வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார். ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறுவது இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் அவரது ஆட்டத்தை வைத்து தெரியவரும்.
வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ், பும்ரா, ஷமி ஆகியோர் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். வெஸ்ட்இண்டீஸ் தொடர், ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கலீல் அஹம்மது அணியில் இடம்பெற்று இருந்தார். பின்னர் ஷமி, ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடியுள்ளார்.
ஆல்-ரவுண்டர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரில் அதிக வாய்ப்பு பண்டியாவிற்க்கு உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறுவதால் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பாண்டியா அணிக்கு தேவைப்படுவார். ஜடேஜா பீல்டிங் மற்றும் ஏழாவது பேட்ஸ்மேனாக இருப்பார். சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால் மற்றும் குல்தீப் கூட்டணி சிறப்பாக இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கு முன்பு கார்த்திக், ஜாதவ் ஆகியோரை அணியில் எந்த இடத்தில் விளையாட வைப்பது என சில போட்டிகளில் விளையாட வைத்து அவர்களின் இடம் முடிவு செய்யப்படலாம்.
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி.
சைமன் துல் - முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட்டர்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி.
அனைவரது சாய்ஸிலும் இடம்பெற்ற வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி.