Skip to main content

தாய்மை கனவுகளுக்கு தடைபோடுமா? - சானியா மிர்ஷா பதில்

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
Saniya

 

 

 

டென்னிஸ் விளையாட்டில் இந்திய நாட்டை உலக அரங்கில் அடையாளப்படுத்தியவர் சானியா மிர்ஷா. மார்ட்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து சர்வதேச இரட்டையர் பிரிவில் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் அவர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சோஹிப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து இந்தியாவுக்கு விளையாடி வந்தார். தற்போது தனது முதல் குழந்தைக்காகக் கணவருடன் காத்திருக்கும் அவர், எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
 

எப்போதும் பாரம்பரிய பெண்களுக்கான பாதையை நான் ஒருபோதும் பின்தொடர்ந்து சென்றதில்லை. எல்லாவற்றில் இருந்தும் தனித்தே நின்ற எனக்கு அதுவே சாதகமாகவும் அமைந்தது. என் பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஐதரபாத்தில் இருந்து விம்பில்டன் வரையும், பிடித்த நபரைத் திருமணம் செய்துகொண்டதும், தற்போது வரவிருக்கும் குழந்தையும் எனக்கு தோன்றியபடியே எல்லாமே நடந்தன. குறிப்பாக தாய்மைக்கு நிகரான எந்தக் கூறுகளும் உங்கள் கனவுகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என தெரிவித்தார். 
 

 

 

மேலும், குழந்தை பெற்ற பிறகு மீண்டும் விளையாட வருவது குறித்து கேட்டபோது, கிம் கிளிஸ்ஜெர்ட்ஸ் தனக்குக் குழந்தை பிறந்தபிறகு மீண்டும் வந்து விளையாடி, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். அவரைப் போல 20 தாய்மார்கள் இன்னமும் டென்னிஸ் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். செரீனா வில்லியம்ஸ் சாதித்துக் காட்டி வருகிறார். ஒன்றரை வருட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அதேநிலையில் விளையாட வருவது முடியாத காரியம்தான் என பதிலளித்துள்ளார்.