நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை- மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் வழக்கம்போல கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
மும்பை அணியில் ஹர்டிக் பாண்டியாவின் அதிரடி ஆட்டமும், சென்னை அணியின் பேட்டிங் சொதப்பலும், பந்துவீச்சில் ப்ராவோவின் கடைசி ஓவரில் கொடுக்கப்பட்ட 29 ரன்களும் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு பின் சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் வழக்கமான தனது ஸ்டைலில் தமிழ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், "அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL "தோல்வியின்றி வரலாறா" @CSKFansOfficial #Yellove" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த டீவீட்டுக்கு பல நேர்மறை மற்றும் எதிர்மறையான பல ட்வீட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.