Skip to main content

முன்னணி நடிகரின் நடிப்பில் திரைப்படமாகிறது கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

GANGULY

 

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகவுள்ளது.

 

இதனை கங்குலியே உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நான் பயோபிக்-கிற்கு ஒப்புக்கொண்டுள்ளேன். அது இந்தியில் எடுக்கப்படும். ஆனால் இயக்குநர் யார் என்பதை தற்போது கூற முடியாது. அனைத்தையும் தயார் செய்ய மேலும் சில நாட்கள் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கங்குலியாக ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், கங்குலியின் பயோபிக் திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கங்குலி ஏற்கனவே தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

“தயவு செய்து பார்க்காதீங்க...” - குஷ்புவை எச்சரித்த மகள்கள்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
kusboo about animal movie

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். இப்படத்தை அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். 4 பேர் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு 8 பேர் இசையமைத்திருந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்து தள்ளினர். வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான விமர்சனத்தை வைத்தனர். அந்த வகையில், முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நாடாளுமன்றத்தில், “வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக் கேடானது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். பின்பு விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் பட ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி, “நச்சுத்தனமான ஆண்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, அனிமல் படத்தை விமர்சித்துள்ளார். சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவரிடம், அனிமல் பட வெற்றி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில் நான் அனிமல் படம் பார்க்கவில்லை. ஏனென்றால் அது நான் பார்க்க விரும்பும் படமாக இருக்கவில்லை. ஒரு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு பேசும் படம் வசூலில் பெரியளவு ஈட்டும்பொழுது அதை வெற்றி பெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களில் கூட எனக்கு பெரிய பிரச்சினை இருந்தது. ஆனால் இயக்குநரை நான் குறை கூறவில்லை. ஏனென்றால் அவரை பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். என் மகள்கள் அதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அனிமல் படத்தை பார்த்தார்கள். படம் பார்த்து திரும்பி வந்து, அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள் என எச்சரித்தார்கள்” என்றார்.  

Next Story

“சென்சார் போர்டு எங்கே போனது?” - கடுமையாக விமர்சித்த ‘தளபதி 68’ பட பிரபலம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
thalapathy 68 cinematographer siddhartha nuni criticise animal movie

அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்து தள்ளினர். வசூலிலும் இதுவரை ரூ. 755 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே விமர்சனங்களும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நாடாளுமன்றத்தில், “வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக்கேடானது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து  ‘தளபதி 68’ பட ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி தற்போது அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அவரது இன்ஸ்டாக்ராம் ஸ்டோரியில்,  “அனிமல் படத்தைப் பார்த்தேன், நேர்மையாக சொன்னால் அந்தப் படம் என்னை ட்ரிகர் செய்தது. நச்சுத்தனமான ஆண்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துகிறது. சட்ட விதிகள் இல்லாத வன்முறைகள், திருமண பலாத்காரம், துஷ்பிரயோகமான உறவுகள் போன்றவற்றில் பெண் ஊமையாகவும் கணவர் மிருகமாகவும் இருக்கிறார். இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது நாம் வாழும் நாட்டின் சமூக நிலையைப் பிரதிபலிக்கிறதா? மேலும் ஏ சான்றிதழ் பெற்ற ஒரு படத்திற்காக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான மல்டிபிளெக்ஸில் நிறைய குழந்தைகளை பார்த்தேன். சென்சார் போர்டு எங்கே போனது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.