Skip to main content

தோனி ரசிகர்களை குஷிப்படுத்திய சிஎஸ்கே நிர்வாகம்!

Published on 31/10/2024 | Edited on 31/10/2024
Dhoni is back in the CSK team!

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்காக 18வது சீசன் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச விளையாட்டுகளில் விளையாடும் வீரர்கள் மற்றும் இந்திய அணிக்கு விளையாடும் வீரர்கள் உள்பட 6 பேர்களின் பட்டியலை சமர்பிப்பதற்கு இன்று மாலை 5 மணி வரை ஐபிஎஸ் நிர்வாகம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் எம்.எஸ்.தோனி இனிமேல் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் தோனியோடு சேர்த்து ருத்துராஜ் கெய்க்வாட், பத்திரானா, ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 18 கோடி ரூபாய்க்கும், ஜடேஜா 18 கோடி ரூபாய்க்கும், பத்திரானா ரூ.13 கோடி, ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதே போல், லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஸ்னோய், மயங்க் யாதவ், மோசின் கான் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மும்பை அணியில், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பாண்டியா, ரோஹித் ஷர்மா, திலக் வர்மா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐதராபாத் அணியில் ஹென்றிக் கிளாசென் ரூ.23 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.