Skip to main content

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோடிகளை கொட்டிய ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள்

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

deepak chahar - shardhul thakur

 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை அதிகப்பட்சமாக இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தமிழக வீரர் நடராஜனை ஹைதராபாத் அணி 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 

தொடர்ந்து நடைப்பெற்ற ஏலத்தில், தீபக் சஹாரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது. பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், லாக்கி பெர்குசனை 10 கோடிக்கு குஜராத் அணியும், ஜோஷ் ஹேசல்வுட்டை 7.75 கோடிக்கு பெங்களூர் அணியும், மார்க் வூட்டை லக்னோ அணி 7.5 கோடிக்கும், புவனேஷ்வர் குமாரை 4.2 கோடிக்கு ஹைதராபாத் அணியும் வாங்கின.

 

முஸ்தாபிஸூர் ரஹ்மானை 2 கோடிக்கும், ஷர்துல் தாகூரை 10.75 கோடிக்கும், குல்தீப் யாதவை 2 கோடிக்கும் டெல்லி அணி வாங்கியுள்ளது. ராகுல் சஹாரை 5.25 கோடிக்கு பஞ்சாப் ஏலத்தில் எடுத்துள்ளது. சஹாலை ராஜஸ்தான் அணி 6.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 

உமேஷ் யாதவ், அடில் ரஷித், முஜீப், இம்ரான் தாஹிர், ஆடம் ஜம்பா, அமித் மிஸ்ரா ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.