Published on 24/11/2021 | Edited on 24/11/2021

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளன. இதனையொட்டி மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தப் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் எனவும், அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மேலும், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி ஜூன் 4 அல்லது 5ஆம் தேதியில் நடைபெறும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.