
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 72 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 7000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பிரமோத் சவந்த் இன்று பல்வேறு அறிவிப்புகளை செய்துள்ளார். அதன்படி மாநிலத்தில் நுழைபவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். கரோனா அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளுக்கு செல்லலாம். ஆனால் 14 நாட்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரோனா அறிகுறி இல்லாதவர்கள் கோவா மாநிலத்திற்குள் கரோனா பரிசோதனை இல்லாமல் செல்லலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.