புடலங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.
புடலங்காயில் பேராற்றல் மிகுந்த விஷயங்கள் இருக்கின்றன. நாம் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை. உடலில் உள்ள வாத நீரை எளிதாக வெளியே கொண்டு வரக்கூடியது புடலங்காய். புடலங்காயை கூட்டு செய்து சாப்பிடலாம், சாலட்டாக சாப்பிடலாம், வேக வைத்து சாப்பிடலாம், ஜூஸாக அருந்தலாம். இதில் தேங்காய் சேர்த்து உண்ணுதல் கூடாது. 50 வயதைத் தாண்டியவர்களுக்கு தசை வலி என்பது அதிகமாக இருக்கும். அவர்கள் புடலங்காயைப் பயன்படுத்தலாம்.
வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை புடலங்காய் சாப்பிட வேண்டும். புடலங்காயில் நமக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. உடலில் உள்ள கெட்ட நீரை புடலங்காய் வெளியேற்றும். சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளை புடலங்காய் சரிசெய்யும். உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் புடலங்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் புடலங்காய் ஜூஸ் அருந்தலாம். இதன் மூலம் மூட்டு வலியும் குறையும்.
புடலங்காயை வதக்கி சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு புடலங்காய் கொடுப்பது அவர்களுடைய ஞாபக சக்தியை அதிகரிக்கும். புடலங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை சரிசெய்யும். உடலில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். வெள்ளரிக்காயில் இருக்கும் அத்தனை நற்பண்புகளும் புடலங்காயிலும் இருக்கின்றன. புடலங்காயை குழம்பாகவும் செய்து நாம் சாப்பிடலாம். புடலங்காய் துவையல் பலரும் செய்யக்கூடியது. புடலங்காயோடு வெள்ளரிக்காயையும் சேர்த்து பெப்பர் போட்டு சாலட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புடலங்காயை அதிகமாகக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய கவனிக்கும் திறன் அதிகரிக்கும். அவர்களுடைய ஹைப்பர் ஆக்டிவிட்டியை இது குறைக்கும். சருமத்தைப் பாதுகாப்பதற்கும் புடலங்காய் பயன்படும். ஆண்மைக் குறைவு பிரச்சனை இன்று பலருக்கு இருக்கிறது. அதற்கு பல மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். புடலங்காய் சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பிரச்சனை நீங்கும்.