Skip to main content

விந்து முந்துதலில் சிக்கிய ஆண்கள்; தீர்வுக்கு திணறும் தலைமுறை - டாக்டர் தாட்சாயிணி விளக்கம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

 premature ejaculation issues

 

விந்து முந்துதல் பிரச்சனை இப்போது பலருக்கு இருக்கிறது. அது குறித்தும் உடலுறவு எப்படி இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்தும் நம்மோடு கருவுறுதல் சிறப்பு நிபுணர் டாக்டர் தாட்சாயினி பகிர்ந்துகொள்கிறார்...

 

ஒரு காலத்தில் குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் மட்டும் தான் காரணம் என்று நம்பப்பட்டது. அதனால் சமூகம் அவர்களை இழிவு செய்தது. ஆனால், குழந்தையின்மைக்கு ஆண்களும் காரணமாக இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சில ஆண்களுக்கு உடலுறவு மேற்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு விந்து முந்துதல் பிரச்சனை இருக்கும். சிலருக்கு பணிச்சுமை காரணமாக குழந்தை பெறுதல் என்பது மற்றுமொரு சுமையாகத் தெரிகிறது. உணவு உண்ணும் முறையும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

 

வீட்டிலிருந்து பணியாற்றுதல் முறை மற்றும் பல்வேறு காரணங்களால் சூரிய வெளிச்சம் நம் மேல் படாமல் ஒரு கூரையின் கீழ் அமர்ந்து வேலை செய்வதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். இதன் மூலம் வைட்டமின் டி கிடைக்காமல் போகிறது. புகைப்பழக்கம், குடிப்பழக்கம் மற்றும் பல போதைப் பழக்கங்கள் ஆகியவையும் முக்கியமான காரணங்கள். 

 

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே காரணமாக அமைகின்றனர். நம்மிடம் வரும் தம்பதியினருக்கு ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களுடைய பிரச்சனையை நாம் கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை ஆகியவையும் அவசியம்.

 

உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு நாங்கள் பரிந்துரைப்போம். அதுபோக மருந்துகளின் மூலமாகவும் சிகிச்சையளிக்கப்படும். ஆரோக்கியமான விந்தணுக்களை கர்ப்பப்பைக்குள் செலுத்தியும் சிகிச்சையளிக்க முடியும்.