Skip to main content

வயதானவர்கள் உடல் எடையைக் குறைக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

Nutrition Kirthika Tharan_Health Tips

 

பல்வேறு டயட் முறைகள் குறித்து நமக்கு விளக்கி வரும் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா வயதானவர்களுக்கான ஒரு டயட் முறையை அறிமுகப்படுத்துகிறார். மேலும் வயதானவர்கள் திடீரென உடல் எடையைக் குறைக்கும் முன் கவனிக்க வேண்டியவற்றை விளக்குகிறார்.

 

வயதானவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவுப்பழக்கம் இருக்கும். அதற்கு ஏற்றது போல் அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்படியான உணவுகளையே அவர்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். உடல் எடையைக் குறைப்பதற்கான உணவுகளை நாங்கள் அவர்களுக்குப் பரிந்துரைப்பதில்லை. திடீரென்று உடல் எடையைக் குறைத்தால் அந்த வயதில் அவர்களுக்கு வேறு சிக்கல்களும் பின்விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் எடையைக் குறைப்பதற்கான உணவு முறைகளில் எப்போதுமே சில பின்விளைவுகள் இருக்கும். வயதானவர்கள் எடுத்துக் கொள்கிற மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றையும் கவனித்து தான் உடல்பருமன் குறைப்பு பற்றி சொல்ல முடியும்.

 

அதிகமான காய்கறிகள் சேர்த்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்பதே வயதானவர்களுக்கு சரியாக இருக்கும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உடல் எடைக் குறைப்பிற்கான உணவு முறைகளைப் பின்பற்றுவது தவறு. எடைக் குறைப்பிற்கு மட்டுமல்லாமல் உடல் எடையைக் கூட்டுவதற்கு, ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நல்ல மனநலத்துக்கு என்று அனைத்துக்கும் சிறந்த உணவு முறைகள் இருக்கின்றன. புரோட்டின் உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முழு தானியங்கள், முளைவிட்ட பயிர்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

உணவில் மீன் சேர்த்துக் கொள்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும், கூட்ட வேண்டும் என்றாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழு முட்டை, சிக்கன் ஆகியவையும் நல்லது.

 

 

Next Story

மன அழுத்தம் குடல் எரிச்சலை உண்டாக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Kiruthika tharan - Irritable Bowel Syndrome -  Explained 

ஐ.பி.ஸ் எனப்படும் Irritable Bowel Syndrome நோயைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

ஐ.பி.எஸ்  என்று Irritable Bowel Syndrome என்பது அல்சர் வழியில் வரும். இந்த ஐ.பி.எஸ் அலசரேட்டிவே கொலட்டிஸ் (ulcerative colitis) அண்ட் குரோன் (Crohn's disease) என இரண்டு விதமாக இருக்கிறது. தாங்க முடியாத அல்சருடன் ஒரு கிளையண்ட் வந்தார். எந்த நோயாக இருந்தாலும் முதலில் ஸிட்ரெஸ் அளவு தான் பார்க்கப்படும். சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் என்று ஒன்று ஸ்டிரெஸ் ஃபேக்டரை கண்டுபிடிக்க இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு 20க்கு 14 முதல் 18 வரை தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களை ஸ்ட்ரெஸில் இருந்து வெளியில் கொண்டுவர சைக்கோ தெரப்பி கொடுத்து மாற்ற வேண்டும்.

அல்சரினால் வயிறு பகுதி மட்டும் புண்ணாக இல்லாமல் ஐபிடியை பொறுத்தவரைக்கும் மலக்குடலிலும் காயமாக இருக்கும். சில இடங்களில் புண்ணாகி தொற்றாக மாறிவிடும். சில சமயம்  h. Pylori என்ற ஒரு இன்ஃபெக்ஷன் கூட இருக்கும். சர்ஜரி அளவிற்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொண்டு உடனேயே சரி பார்த்துவிட வேண்டும். நாமாக மருந்து மற்றும் டயட் என்று போவதை விட மருத்துவரை அணுகுவது மிக சிறந்ததாக இருக்கும். இந்த கிளையண்ட் தன்னால் பரபரப்பாக இல்லாமல் இருக்க முடியவில்லை என்று அவரே சொன்னார். இவர் அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நிறைய சிக்கல்களினால் அலுவலில் தினசரி ஸ்ட்ரெஸ் என்றார். எனவே அவருக்கு ஸ்லோ சைக்கிளிக் போன்ற எக்ஸர்சைஸ் கொடுக்கப்பட்டது. வயிறு உப்புசம், புண் இருந்தால் இரவு தூங்குவதற்கும் சிரமமாக இருக்கும். உடனடியாக மோஷன் போவார்கள். எதையும் உடனே சாப்பிட முடியாது. அடிக்கடி வயிறு அதிகமாக வலிக்கும். மேலும் சில சமயம் மோஷனில் ரத்தம் கூட இருக்கும். அவருக்கு வாழ்வியல் மாற்றம் தான் முதலில் அளிக்கப்பட்டது. புரோ பயோடிக் உணவை கொடுத்து அவருக்கு ஐ.பி.டியை தூண்டும் உணவுகள் தடை செய்யப்பட்டது. சூப்பில் இருந்து எந்தெந்த காய்கள் ஒத்துக் கொள்ளுமோ அதை மட்டும் கொடுத்தோம். ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

மேலும் பழத்தில் இருக்கும் பிரக்டோஸ் என்ற கெமிக்கல் கூட பிரச்சினை கொடுக்கும் என்பதால் சில பழங்களும் தவிர்த்தே டயட் கொடுக்கப்பட்டது. வயிறு புண்ணாகி வலி இருந்ததினால் வெயிட் லிப்டிங் செய்து குறிப்பாக அப்ஸ் வொர்க் அவுட் செய்து அதன் பிறகு அவர் உடலிற்கு ஏற்ப ப்ரோட்டினை கொடுத்தோம். சிலருக்கு முளை கட்டிய பயிறுகள் கூட ஒத்துக் கொள்ளாது. அதனால் வேக வைத்த சிக்கன் பீஸ் கூட எடுக்கலாம். 

இப்படி டயட் மாற்றம் செய்து தூக்கத்தை முதலில் சரிப்படுத்தினோம். தூக்கத்தை நெறிப்படுத்த மொபைல் போனை குறைப்பது தான் முதற்கட்ட வழி. அதிலும் தூங்குவதற்கு முன்பு எந்த மறுநாள் குறித்த கவலை எதுவும் இல்லாமல் நிம்மதியாக தூங்க வேண்டும். சிலர் நடக்கப்போகும் விஷயத்தை யோசித்து யோசித்து தூங்காமல் இருப்பர். ஆனால் நன்றாக தூங்கினாலே மூளை நன்றாக வேலை செய்து அந்த பிரச்சனைக்கு தீர்வை தானாக கொடுக்க முடியும். இதே பிரச்சனை குழந்தைகளுக்கு வரும்போது கொடுக்க கூடாத உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். இதுவே பெரியவர்களுக்கு வரும்போது முழுமையாக சாப்பிடக்கூடாததை தவிர்த்து விட்டு புது உணவுகளை அப்பொழுதே அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி அந்த கிளைண்டுக்கு நிறைய வாழ்வியல் மாற்றத்தை கொடுக்க ஒரு 60லிருந்து 70% ஓரளவுக்கு சரியாகி வந்தார். மோசமான தொந்தரவு இல்லாமல் ஓரளவுக்கு அவரால் சமாளிக்க முடிகிறது. 

Next Story

சிறு வயதில் வரும் ஃபேட்டிலிவர் பிரச்சனைக்கு தீர்வு? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Kirthika Tharan | Nonalcoholicfatty |

17 வயது பையனுக்கு உடல் எடையோடு இருந்த நான் - ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் அளவைக் குறைத்தது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

வெளிநாட்டில் இருக்கும்  17 வயது பையனுக்கு உடல் எடை அதிகமாகி கூடவே நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் இருந்தது. அதிக உடல் எடை அவனுடைய லிவரில் போய் கொழுப்பாக தங்கி இருந்தது. இதுவே சிம்பிள் லிவர் பேட்டி என்றால் லிவர் கெட்டுப் போகாது. நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்போது அது லிவரை பாதிக்கும். இந்த ஃபேட்டி லிவரை எந்த ஸ்டேஜ்ஜில் உள்ளது என்று பிளட் ரிப்போர்ட் மூலமும், லிவர் என்சைம் மாறுபாட்டை அல்ட்ரா சவுண்ட் வைத்து உணரலாம். நிறைய உடல் எடை அதிகம் உள்ள நோயாளிகள் ஏற்கனவே 20 சதவீதம் லிவர் பாதிப்புடன் தான் இருப்பார்கள்.

முதலில் குழந்தைகளுக்கு ஸ்டிரெஸ் அதிகமாக பெற்றோர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். சர்க்கரை சாப்பிடக்கூடாது என்றால் உடனே பெற்றோர்கள் எந்த சுகரும் பழங்களும் கொடுக்காமல் நிறுத்தி அவர்களுக்கு கிரேவிங்கை தான் அதிகப்படுத்துகின்றனர். அந்த பையன் அதிகமாக சாக்லேட் வகைகள், சாதம் , பலகாரம் போன்றவை அதிகம் எடுத்திருக்கிறான். முதலில் ஃபேட்டி லிவருக்கு சாக்லேட் தான் அதிக பாதிப்பை கொடுக்கும்.  அந்த பையன் இருந்தது மிடில் ஈஸ்டர்ன் பக்கம். வெதர் சரியாக இல்லாததால் வீட்டில் சரியான உடற்பயிற்சி நிபுணர் வைத்து வீட்டிலேயே ஆக்டிவிட்டீஸ் கொடுக்கப்பட்டது. பேக்கரி ஐட்டம் சாக்லேட் என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு டிடாக்ஸ் டிரிங், வாட்டர் தெரபி உட்பயிற்சிகளையும் கொடுக்கும் போது ஆரம்ப நிலையிலே நன்றாக அந்த ஃபேட்டி லிவர் பாதிப்பு குறைவதை பார்க்க முடிந்தது. 

இந்த ஃபேட்டி லிவர் ஓரளவு தான் ரிவேர்சபில். நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவருக்கு நம் லைஃப் ஸ்டைல், தூக்கம், உணவு முறை மூலமாக ஓரளவு குறைக்க முடியும். இதுவே ஆல்கஹாலிக் வகை என்றால் கண்டிப்பாக மது பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதுவே வெறும் சாதாரண ஃபேட்டி லிவர் என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும். கொழுப்பை நேரடியாக எடுக்காவிட்டாலும் நம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாகவும் மாறும். எனவே கார்போஹைட்ரேட்டும் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரையும் குறைத்து அதிகமாக தண்ணீரை எடுக்க வேண்டும். அதன் மூலமாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதை முறையாக கடைப்பிடித்ததன் மூலம் அந்த சிறுவன் நன்றாக உடலையும் குறைத்து ஒபிசிட்டி தொந்தரவில் இருந்தும் வெளிவந்து ஃபேட்டி லிவர் தொந்தரவு நீங்கி நன்றாக சரியானது.