Skip to main content

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலக்கடலை என்னும் அருமருந்து!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


இன்றைய விஞ்ஞான உலகில் எண்ணற்ற நோய்கள் மனிதர்களுக்கு வருகின்றன. கண்ணுக்குத் தெரிந்த நோய்களில் இருந்து கண்ணுக்குத் தெரியாத நோய்கள் வரை மனிதன் அனைத்தையும் சந்தித்து வருகிறான்.  அந்த வகையில் கரோனா போன்ற புதுவகையான நோய்களும் மனிதனை வாட்டி வதைக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடே அனைத்து வகையான நோய்களுக்கும் அடிப்படை காரணமாக இருக்கின்றது.  அந்த வகையில் நிலக்கடலையில் எண்ணற்ற சக்திகள் அடங்கியுள்ளது. நிலக்கடலையில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் பெண்களின் உடல்நலனுக்கு பெரிய உதவி புரிகின்றது. எலும்புத்துளை நோய்கள் வராமல் பாதுகாக்க நிலக்கடலை உதவி புரிகின்றது. 

 

h



மூளை வளர்ச்சிக்கு நிலக்கடலை மிகவும் நல்லது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் வைட்டமின் B3 நியாசின் அதிகம் உள்ளது. மேலும் இரத்த ஒட்டத்தைச் சீராக்கவும் இது பெரிய அளவில் உதவி புரிகின்றது. பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு ஏற்படுகின்றது. பெண்களுக்கு அதிகம் தேவைப்படும் போலிக் அமிலம், துத்தநாகம், விட்டமின்கள் முதலியவை நிலக்கடலையில் அதிகம் நிறைந்துள்ளது. இதன் காரணமாகக் கருப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கின்றது. நிலக்கடலையில் ஓமேகா -3 அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் ஏற்படுத்துகின்றது.