உடல் சூட்டை தணிப்பதில் வெந்தயத்துக்கு நிகரான ஒரு பொருள் உலகில் இல்லை என்றே கூறலாம். விளக்கெண்ணெய்க்கு நிகராக உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் உடைய வெந்தயத்தின் நற்பலன்கள் என்பது மிக அதிகம். வெந்தயம் ஹார்மோன் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஊளை தசை எனப்படும் தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் ஆற்றல் வெந்தயத்திற்கு மிக அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் காலக்டோமேன் என்ற நார்சத்து வெந்தயத்தில் அதிகம் இருப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் வெந்தயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் காலை வேளைகளில் வெந்தயம் தொடர்ந்து சாப்பிட்டு வர மலக்சிக்கல் முழுவதும் தீர்ந்துவிடும். தொண்டை கரகரப்பிலிருந்து நிவாரணம் பெற வெந்தயம் அதி அற்புத மருந்தாகும். மேலும், நெஞ்செரிச்சல், ஒவ்வாமை போன்றவற்றை குணப்படும் ஆற்றல் இதற்கு மிக அதிகம். வயிற்றில் ஏற்படும் பாதிப்புக்களான அல்சர், வலி, புண் முதலியவற்றை விரைவாக குணப்படும் ஆற்றல் வெந்தியத்திற்கு உள்ளதாகவும் கருதப்படுகின்றது.