கடந்த சில மாதங்களாக சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வந்தது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நோய் தொற்றுக்கு நேற்று வரை 4,08,913 பேர் ஆளாகி உள்ளனர். மேலும் 18,260 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கவனிக்க தக்க ஒன்றாகும்.

இதற்கிடையே இந்த வைரஸ் தொடர்பாக தேவையில்லாத கட்டுக்கதைகள் நிறைய உலவ ஆரம்பித்துள்ளன. இந்த வைரஸ் தொடர்பாக இதுவரை பலரும் அறியாத உண்மைக்கு புறம்பான தகவல்கள், வாட்ஸ்அப்-களில் சுற்றி வருகின்றன. வெயிலில் கரோனா பரவாது என்று வாட்ஸ் அப் வதந்திகளில் மிக முக்கியமாக சொல்லப்படுகின்றது. ஆனால், அதில் உண்மையல்ல. வெயில் உச்சத்தில் இருக்கும் மாநிலங்களிலும் இந்த வைரஸ் பரவுகின்றது. நம்மை தனிமைப்படுத்துதல் ஒன்றே இந்த வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ளுவதற்கு உள்ள ஒரே வழி முறையாகும். கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் இந்த வைரஸ் விரைந்து தாக்கும் என்பது எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படாத ஒன்று. இது இந்த வைரஸ் தொடர்பாக பரப்பப்படும் மிக முக்கியமான வதந்திகளில் முக்கியமானது. அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுதலே இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவதற்கு உகந்த முறைகளாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.