இன்றைய பஞ்சாங்கம்
10-01-2023, மார்கழி 26, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 12.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.01 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மிதுனம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
தனுசு
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பின் நற்பலன் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் குறையும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவால் ஒருசில அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.