Skip to main content

5 பெண்களை கர்ப்பமாக்கிய 2கே கிட்? - தீயாய் பரவிய செய்தி; ஆவேசமான இளம்பெண்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
zeddy will cha cha baby shower fake

அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரில் இசைக் கலைஞராக வலம் வருபவர் ஸெட்டி வில்ஸ். 22 வயதான 2கே கிட் ராப் பாடகரான இவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். சாச்சா என்ற ராப் பாடல் மூலம் பிரபலமானதால், ரசிகர்கள் இவரை 'சாச்சா ஸெட்டி' என அழைக்கின்றனர். இவருக்கு டிக்டாக்கில் மட்டும் 67 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் மேலாளராகவும் உள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆஷ்லே, போனி, கேய் மேரி, ஜிலீன் விலா மற்றும் ஐயன்ல கலிஃபா கலெட்டி என்ற 5 பெண்கள் அறிமுகமாகினர். இவர்கள் 5 பேருடனும் டேட்டிங்கில் இருந்த ஜெடி வில், தற்போது அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில், ஸெட்டி வில்ஸ் டேட்டிங்கில் இருந்த 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கி, ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தினார் எனக் கூறி வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோவை  29 வயது நிறைந்த பாடகியான நியூயார்க் நகரைச் சேர்ந்த 'லிஸ்ஸி ஆஷ்லிக்' என்பவர் வெளியிட்டிருந்தார். இவர், தனது சமூக வலைத் தளத்தில், 'லிட்டில் ஸெட்டி வில்ஸ்சின் 5 குழந்தைகளை வரவேற்கிறோம்' என தலைப்பு குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலகமெங்கும் வைரலானது. இதனால், இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்துடனும் சிலர் ஏக்கத்துடனும் பகிர ஆரம்பித்தனர்.

அதிலும், அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டிருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கி வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகவே, நெட்டிசன்கள் பலரும் அந்த வலைத்தள பதிவிற்கு கமென்ட் செய்தனர். அதில், கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் பலரும், ''இது எப்படி சாத்தியம்? இது நம்பும் வகையில் இல்லை.. உங்கள் 5 பேருக்கு இடையே சண்டையே வராதா?  எப்படி 5 பெண்களும் பொறாமை மற்றும் கோபம் இல்லாமல் ஒரே நபர் மூலம் கர்ப்பம் அடைந்து, ஒரே இடத்தில் Baby Shower கொண்டாட முடியும்'' எனப் பல கேள்விகளை கேட்டுத் துளைத்து எடுத்தனர். 

இதற்கிடையில், இந்த செய்தியைப் பகிர்ந்த சிலர், 90ஸ் கிட்ஸ்களின் நிலையையும், 2கே கிட்ஸ்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு சிரித்து மகிழ்ந்தனர். இதையடுத்து, 5 பெண்களும் தாய்மை அடைந்ததை பற்றி பதிவில் எழுதிய லிஸ்ஸி, ''நடந்ததை எதையும் மாற்ற முடியாது. எங்கள் 5 பேரின் குழந்தைக்கு அப்பா ஒருவர்தான். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அனைத்தும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெறுகிறது. 5 பேருடன் பல நேரங்களில் அவர் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டோம். குழந்தைகளுக்கும் இது நல்லதாக இருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.  

மேலும், ''எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் எங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும்'' எனக் குறிப்பிட்டு பதிவிட, இப்படி ஒரு குடும்பமா? என நெட்டிசன்களே உலக அளவில் வியந்து பார்த்தனர். அதிலும், இதில் இன்னொரு சுவாரஸ்ய விஷயமாக, அந்த 5 பேரில் இருவருக்கு ஒரே நாளில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, இது போலியானது லைக்கிற்காக செய்த செயல் என சில கருத்துகள் இணையத்தில் வலம் வந்தன. 

இந்த நிலையில், வீடியோ வெளியிட்ட பாடகி 'லிஸி ஆஷ்லீக்' திடீரென ஜனவரி 23 ஆம் தேதி புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் கர்ப்பமாக இல்லை எனக்கூறி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து வீடியோவில் பேசிய லிஸி ஆஷ்லீக், ''இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள். இந்த செய்தி வெகுதூரம் சென்றுவிட்டது. இந்த செய்திகள் மற்றும் தொலைக்காட்சி கட்டுரைகளில் உண்மையில்லை. நான் கர்ப்பமாக இல்லை. என் வயிற்றை நீங்களே பாருங்கள். எனது பெயர்களை பின்னாட்களில் கூகுளில் தேடினால் தவறாகத்தானே இந்த செய்திகள் சித்தரிக்கும். நான் கர்ப்பமாக இல்லை. இது ஒரு மியூசிக் வீடியோவுக்காக எடுத்தது, அது பற்றி பேச எனக்கு அனுமதியில்லை. ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம்'' என ஆவேசமாக கூறினார். இந்த திடீர் திருப்பம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

குறிவைக்கப்படும் வி.ஐ.பிக்களின் மனைவிகள்; வைரலாகும் க்யூ ஆர் கோடு!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
gang cheat VIP wife for money in Coimbatore

தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் கோவை மாநகரில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகரில் வசதி படைத்த பெண்கள், கணவனை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்கள், தனியாக தங்கி பணியாற்றிவரும் பெண்கள் உள்ளிட்டோரை குறிவைத்து சில கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. 

ஆரம்பத்தில் இந்த கும்பல் சமூக வலைத்தளம் அல்லது வேறு தளங்கள் வழியாக சம்பந்தப்பட்ட பெண்ணுடன் நட்பை வளர்த்துக் கொள்கின்றனர். பின்னர், சில காலம் சென்றதும் அந்த பெண்ணை மிரட்டி பணம் பறிப்பது, பொருட்களை வாங்குவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்படும் ஒரு சில பெண்கள் மட்டுமே, தைரியமாக இதனை எதிர்கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளிக்கின்றனர். பல பெண்கள் புகார் அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் இந்தக் கும்பல் குறித்து அதன் செயல்பாடுகள் குறித்தும் கோவை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீப காலமாக நல்ல வசதி படைத்த தனிமையில் இருக்கும் பெண்களுடன் நட்பு வளர்த்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே தனிமையில் இருக்கும் பெண்கள் அறிமுகம் இல்லாத அல்லது முன்பின் தெரியாத நபர்களுடன் பேசி பழக்கம் வைத்துக் கொள்வதில், கவனமாக செயல்பட வேண்டும். அவ்வாறு பழகினால் தங்களைப் பற்றி தனிப்பட்ட தகவல்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும், அவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. இதுபோன்ற நபர்களால் பிரச்சனைகளை சந்தித்தால், மாநகர காவல்துறையில் புகார் அளிக்கலாம்.  

இது போன்ற புகார்களில் பெண்களின் பெயர்களை ரகசியமாக வைக்கப்படும். மேலும் மாநகர காவல் துறை சார்பில் பெண்கள் புகார் அளிக்க வசதியாக, பிரத்யேக க்யூ ஆர் கோடு அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்கள் கல்லூரி, பொது இடங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர காவல்துறை பக்கத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோடு பயன்படுத்தி தங்களது புகார்களை பெண்கள் பதிவு செய்யலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் இரவு பணி முடிந்து தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த பொது மக்களிடம் மாநகர காவல் துறை சார்பில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்தியேக க்யூ ஆர் கோடு வெளியிடப்பட்டு உள்ளது இந்த  க்யூ ஆர் கோடினைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன குறிப்பாக இரவு பணி முடிந்து செல்லும் பெண்கள் போக்குவரத்தில் செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா? இரவில் தனியாக செல்லும் போது நீங்கள் எப்பொழுதாவது துன்புறுத்தலை அனுபவிக்கிறீர்களா? அல்லது சங்கடமாக உணர்ந்துள்ளீர்களா? இரவு நேர பயணத்திற்கு பாதுகாப்பற்ற பகுதிகள் அல்லது தெருக்கள் என எதைக் கருதுகிறீர்கள்? நீங்கள் பணிபுரியும் இடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பாக செல்ல உங்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் உதவி குறிப்புகள் வழங்கப்படுகிறதா? எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. இதனைப் பொதுமக்கள் அல்லது பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பூர்த்தி செய்யலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

Next Story

பெண்களுக்குக் கட்டாய மாதவிடாய் கால விடுப்பு; உச்சநீதிமன்றம் கொடுத்த அறிவுரை 

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Supreme Court advises on compulsory menstrual leave for women

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எனப் பல இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் கட்டாயம் விடுப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு உச்சநீதிமன்ற தலைமையில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், அது அவர்களை நிறுவனங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். தனியார் நிறுவனங்கள் இதனைக் காரணம் காட்டி பெண்களை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டலாம். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம்; இதில் நீதிமன்றம் கவனம் செலுத்த விரும்பவில்லை என்றனர்.

மேலும், “மனுதாரர், அரசை அனுகலாம். அதேசமயம் மத்திய அரசு இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனக்களுடன் கலந்து ஆலோசித்து வழிக்காட்டு நெறிமுறைகளை கொண்டுவரலாம். மாநில அரசுக்கு இந்த விஷயத்தில் முடிவு எடுக்க உரிமை உண்டு” என்றும் தெரிவித்தனர்.