Skip to main content

தன் வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கப்போகும் ஷி ஜின்பிங்!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018

ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் சீனாவில் அதிபராக இருக்கும் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

Xi

 

சீனாவில் அந்நாட்டு அதிபராக பதவியேற்பவர் இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நடைமுறை கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அதிபராக தற்போது இருக்கும் ஷி ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் வருகிற 2023ஆம் ஆண்டோடு நிறைவுக்கு வருகிறது. 

 

கடந்த ஆண்டு கூட்டப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் சீன அதிபருக்கான பதவிக்காலத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை உயர்மட்டக் குழுவும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்த சட்டத்திருத்ததை நிறைவேற்றுவதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ரப்பர்ஸ்டாம்ப் பயிற்சி என்று அழைக்கப்படும் முறையில் இந்தத் தேர்தலானது நடத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 2,964 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்திருந்தனர். மூன்று பேர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. இந்தத் தேர்தலில் முதல் ஆளாக ஷி ஜின்பிங் வாக்களித்தார். 

சார்ந்த செய்திகள்