22 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டி இடுக்குகளில் சிக்கிய மலையேற்ற வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மலையேற்ற வீரர் வில்லியம் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பெரு நாட்டில் உள்ள குவஸ்கேரம் என்ற பனிமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி மீட்டர் உயரத்தில் உள்ள பனிமலையில் பனிக்கட்டி இடுக்குகளில் வில்லியம் சிக்கி உயிரிழந்தார். பனி சரிவில் அவரது உடல் மூடப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து பெரு நாட்டை சேர்ந்த மீட்பு வீரர்கள், காவல்துறையினர் மலையேற்ற குழுவினர் உதவியுடன் வில்லியமின் உடலை 22 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
22 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது வில்லியமின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர் பனிப்பொழிவால் 22 ஆண்டுகளாக அவரது உடல் அழுகாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவருடைய வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் அவருடைய உடைமைகள் அனைத்தும் அவர் அருகிலேயே இருந்தும் தெரிந்துள்ளது.