உலகளவில் 209 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,828 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82,005 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,813 ஆக உயர்ந்துள்ளது. இந்த நாட்டில் கரோனாவால் ஒரே நாளில் சுமார் 1,952 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,00,323 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டுமே 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதியானது.
ஸ்பெயினில் 1,41,942, இத்தாலியில் 1,35,586, பிரான்சில் 1,09,069, ஜெர்மனியில் 1,07,663, சீனாவில் 81,740, ஈரானில் 62,589, பிரிட்டனில் 55,242, பாகிஸ்தானில் 4,035, மலேசியாவில் 3,963, சிங்கப்பூரில் 1,481, இலங்கையில் 185 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.
உலகளவில் அதிகபட்சமாக இத்தாலியில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,127 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் 14,045, பிரான்ஸ் 10,328, பிரிட்டன் 6,159, ஈரான் 3,872, சீனாவில் 3,331, ஜெர்மனியில் 2,016, மலேசியாவில் 63, சிங்கப்பூரில் 6, இலங்கையில் 6, பாகிஸ்தானில் 57 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.