உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், அண்மையில் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான டிவிட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். டிவிட்டரை வாங்கியதுமே சர்ச்சை மற்றும் கேலிகளுக்கு உள்ளாகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் எலான் ஈடுபட்டு வந்தார்.
அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதோடு, சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி- சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் காலங்காலமாக இருந்த டிவிட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை மாற்றிவிட்டு நாய்க்குட்டியின் புகைப்படத்தை டிவிட்டர் லோகோவாக வைத்துள்ளார் எலான் மஸ்க்.