Skip to main content

இனி ட்வீட் செய்பவர்கள் அதிக அளவில் இமோஜிகளை (emoji) பயன்படுத்தலாம்

Published on 12/10/2018 | Edited on 12/10/2018

 

tt

 

பொதுவாக ஒரு விஷியத்தை பல எழுத்துக்களை கொண்டு ஒரு வார்த்தையில் சொல்வதைவிட ஒரே இமோஜியில் (emoji) அந்த விஷியத்தை சொல்லிவிடலாம். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற செயலிகளில் இப்படி இமோஜிகளில் பேசிக்கொள்ளலாம். ஆனால், ட்விட்டர் வலைதளத்தில் பொதுவாக 280 எழுத்துக்களை மட்டுமேகொண்டு எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்ய முடியும். இதிலும்கூட ஃபேஸ்புக்-ல் உபயோகப்படுத்துவதுபோல் சில ஸ்மைலி போன்ற இமோஜிகளையும் (emoji) பயன்படுத்தலாம். ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால், ட்விட்டரில் ஒவ்வொரு இமோஜிக்கும் வெவ்வேறு கணக்கில் 280 எழுத்துக்களில் இருந்து கழிக்கப்படும். அதனால் பெரும்பாலும் ட்வீட் செய்பவர்கள் இமோஜிகளை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். இந்தநிலையில் இன்று ட்விட்டர் நிறுவனம் இதுவரை வெவ்வேறு கணக்குகளில் இருந்த இமோஜிகள் அனைத்தும் இனி இரண்டு எழுத்துக்கள் அளவு கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. அதனால் இனி ட்வீட் செய்பவர்கள் அதிக அளவில் இமோஜிகளை பயன்படுத்தலாம்.  மேலும் பேஸ்புக் லைட் போன்று ட்விட்டரிலும் லைட் ஆப் அறிமுகம் செயகிறது இது வெறும் 3 எம்பி-யில் இருக்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்