துருக்கி நாட்டில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளிவில் இது 6.8 ஆக இது பதிவாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ரிக்டரில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுகத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. முதலில் 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது. போர்க்கால அடிப்படியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.