Skip to main content

நொறுங்கிய பேருந்து... 26 சுற்றுலா பயணிகளின் உயிரை பறித்த மோசமான சாலை...

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 26 பேர் பலியான சம்பவம் துனிசியா நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

tunisia bus accident

 

 

துனிசியாவின் தலைநகர் துனிசில் இருந்து அயின் தரஹாம் நகருக்கு சுமார் 43 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பஸ், வளைவான மலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 43 பேரில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு ஊடகம், "நதிப்படுகைக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுக்குநூறாக நொறுங்கிய இந்த பேருந்தில் பயணம் செய்த 26 பேர் பலியாகியுள்ளனர். வளைவான இடத்தில் மோசமான சாலை காரணமாக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு தடுப்புகளை கடந்து பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது" என தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்