Skip to main content

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே வகுத்த அதிரடி வியூகம்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

இலங்கை நாட்டின் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் கூட்டணி அமைக்கும்  பணிகளில் இலங்கை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியான பொதுஜன முன்னணி கட்சியின் ஆலோசனை கூட்டம் கொழும்புவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேர்தலில் யாரை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். 

 

SRILANKA FORMER PRESIDENT RAJAPAKSA PARTY ANNOUNCED PRESIDENT CANDIDATE KOTABHAYA RAJAPAKSHE





இந்த ஆலோசனை கூட்ட முடிவில் பொதுஜன முன்னணி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே அறிவிக்கப்பட்டார். அதேபோல் பொதுஜன முன்னணி கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்பதால், ராஜபக்சே தனது சகோதரை அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் நிற்பதற்காக கோத்தபய ராஜபக்சே தனது அமெரிக்கா குடியுரிமையை துறந்தார். இலங்கையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இவர் இருந்தபோது உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், இலங்கை சிங்களர்கள் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு காணப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. 







 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
4 Tamil Nadu fishermen arrested!

மீன்பிடி தடைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஆர்வமுடன் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது ஸ்ரீலங்கா நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இன்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்து சிறைபிடித்துச் சென்றுள்ளனர். சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களை இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த 4 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாடு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கால் வைக்கும் இடமெல்லாம் முதலைகள்; வைரலாகும் வீடியோ

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Crocodiles everywhere; A viral video

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் சாலை ஓரத்தில் அருகே உள்ள நீர் நிலையின் கரை பகுதிகளில் காணப்படும் இடமெல்லாம் முதலைகள் ஆங்காங்கே படுத்திருக்கும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை அம்பாறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள நீர்நிலை ஒன்றைக் கடந்து மாலை நேரங்களில் கால்நடைகள் மேய்ச்சலை முடித்து ஓட்டி செல்லப்படுகிறது. இந்நிலையில் நீர் நிலையில் உள்ள முதலைகள் அனைத்தும் அவற்றை வேட்டையாடுவதற்காகக் கரைப்பகுதியில் காத்திருக்கும் இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேய்ச்சலுக்குத் திரும்பும் எருமை மாடுகளை வேட்டையாடவே முதலைகள் அதிகம் கரைப்பகுதிகளில் காத்திருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆங்காங்கே உள்ள சிறு சிறு நீர்நிலை திட்டுகள் மீது முதலைகள் வேட்டையாடுவதற்காக காத்திருக்கும் அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக முதலை நடமாடுவது அந்தப் பகுதி மக்களுக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.