பாராசூட் வீரர் ஒருவர் செங்குத்தான மலை உச்சியில் சிக்கிக்கொண்ட சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் டிசம்பர், ஜனவரி மாதம் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கொண்டாட்டம் தற்போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் பலூன் திருவிழா மிக முக்கியமான ஒன்று.
அந்த விழாவின் தொடர்ச்சியாக ஸ்கை ட்ரைவ் போட்டிகள் நடைபெற்றது. கிராசரின் என்ற வீரர் பாராசூட்டில் பறந்து சென்ற போது செங்குத்தான மலையுச்சியில் சிக்கி கொண்டார். தரையில் இருந்து 820 மீட்டர் உயரத்தில் சிக்கி கொண்ட அவர், அங்கிருந்து காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். நீண்ட நேரத்துக்கு பிறகு இதை கவனித்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஆடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.