Skip to main content

பிரேசில் பள்ளியில் துப்பாக்கி சூடு... 8 பேர் பலி... பள்ளியில் படித்த மாணவர்களே நடத்திய கொடூரம்...

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

பிரேசிலில் பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள்  8 பேர் பலியாகியுள்ளனர்.

 

shootout

 

மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலின் சா பாலோ நகரில் உள்ள ஒரு பள்ளியில் முகமூடி அணிந்து வந்த இரு நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். இதில் 5 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களான 17 வயது கில்ஹேர்ம் டாய்சி மோன்டிரோ மற்றும் 25 வயது லுயிஸ் ஹென்றிகோ ஆகிய இருவரும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

பள்ளியில் நடத்தப்பட்ட இந்த கொடூர துப்பாக்கிச் சூடு பிரேசிலையே அதிர வைத்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்