Published on 18/08/2018 | Edited on 18/08/2018

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவிட சவுதி அரசு முடிவு செய்துள்ளது. உதவி குழு அமைத்திட தேசிய அவசர அமைப்புக்கு சவுதி அரசு உத்தரவிட்டது.
கடந்த ஒரு மாதமாகவே கேரளாவில் கனமழை பெய்து வருகிறது இதனால் வெள்ளமும் நிலசரிவும் ஏற்பட்டு கேரளாவே கதிகலங்கியிருக்கிறது. இந்நிலையில், சவுதி அரசு கேரளாவுக்கு உதவ முன்வந்துள்ளது. கேரளாவாழ் மக்கள் பலர் பல வருடங்களாக கல்ப் நாடுகளில் உழைத்து வருகின்றனர். அந்த நாடுகள் முன்னேற்றத்திற்கு கேரள மக்களும் ஒரு துணையாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.