Skip to main content

"ரஷ்யா நமது நட்பு நாடல்ல''; டிரம்பின் செயலுக்கு எழும் கண்டனங்கள்!!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018

 

trump

 

 

 

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு, பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்ஸின்கியில் நேற்று நடைபெற்றது. முதலில் இவ்விரு அதிபர்களும் சந்தித்துக்கொண்டு கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அடுத்து, அதிபர் ட்ரம்ப் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு ரஷ்ய அதிபர் க்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

 

அதன்பின் இரண்டு அமர்வுகளாக பலமணி நேரம் இருவருக்குமான சந்திப்பு உரையாடல் நிகழ்ந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் ''அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தமது சொந்த புலனாய்வு அமைப்பு கூறுவதை டிரம்ப் ஏற்கிறாரா ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் ''தலையிடவில்லை என புதின் கூறியுள்ளார். அவர் கூறியதுபோலவே தலையிடுவதற்கு காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என பதிலளித்தார்.

 

 

 

இப்படி தமது சொந்த புலனாய்வை எதிர்த்து ரஷ்ய அதிபர் புதினின் கருத்துக்கு ஆதரவளித்த டிரம்பின் இந்த பேச்சுக்கு அமெரிக்காவில்  கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற மக்களவை அவை தலைவர்  பவுல் ரய்யான் '' ரஷ்யா அமெரிக்காவின் நட்பு நாடல்ல'' என டிரம்ப் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

 

அதுபோல் சொந்த கட்சி உறுப்பினர்களே அதிபர் டிரம்பின் இந்த செயலுக்கு வலுத்த கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

சார்ந்த செய்திகள்