தென்கொரியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி இருக்கும் சூழலில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கும், மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தென் கொரியாவில் ஒமிக்ரான் வகை கரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தினசரி தொற்று இதுவரை இல்லாத அளவாக 3.50 லட்சம் என உயர்ந்துள்ளதால், அதிபராக தேர்வாகும் நபருக்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும். காலை 06.00 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முகக்கவசம் அணிந்து வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.