Skip to main content

‘மனித குரங்குடன் காதல்’ - இளம்பெண் பூங்காவிற்கு வர தடை!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

‘Love with ape’ - teen banned from coming to the park

 

பெல்ஜியம் நாட்டில் ‘ஆண்ட்வெர்ப்’ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 38 வயதில் சீடா என்ற ஆண் மனித குரங்கு உட்பட ஏராளமான மனித குரங்குகள் உள்ளன. இந்தப் பூங்காவிற்கு வாரத்திற்கு ஒருமுறை, அடிய் டிம்மர்மேன்ஸ் என்ற பெண் வந்து விலங்குகளைப் பார்வையிட்டு செல்வார். சீடாவுடன் அவர் சைகை மூலமாக பேசத் தொடங்கினார். பின்னர் இவருக்கும் சீடாவிற்கும் இடையே பாசப்பிணைப்பு உருவானது.

 

இதனால் சீடா மற்ற குரங்குகளுடன் சேர்வதை தவிர்த்துவிட்டது. வாரத்திற்கு 4 நாட்கள் பூங்காவிற்கு அடிய் வந்து பலமணி நேரம் சீடாவுடன் செலவிடுவார். இடையில் கண்ணாடி இருந்தபோதிலும் இருவரும் முத்த மழை பொழிந்து கொண்டுள்ளனர். இதனால், பூங்காவிற்கு வரும் மற்ற பார்வையாளர்களை சீடா பொருட்படுத்துவது கிடையாது. மேலும், அதிகபட்சமாக ஒருநாள், சுமார் 15 மணி நேரம் சீடாவும் அடிய்யும் தனிமையில் நேரத்தைக் கழித்துள்ளனர்.

 

அடிய்யின் இந்த நெருங்கிய உறவு, பூங்காவிற்கு வரும் மற்ற பார்வையாளர்களுடன் சீடா நடந்துகொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பூங்கா நிர்வாகிகள் அச்சமடைந்தனர். இதனால் இனி பூங்காவுக்கு வர வேண்டாம் என அடிய்யுக்கு அவர்கள் தடை விதித்துள்ளனர். சீடாவை இனி பார்க்க முடியாது என்ற இந்த தடை உத்தரவை கேட்டதும் அடிய் கண்கலங்கினார். இதுகுறித்து அடிய் கூறியதாவது, “ஐ லவ் சீடா. அதுவும் என்னை நேசிக்கிறது. எனக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. ஏன் எங்களைப் பிரிக்க நினைக்கிறீர்கள். எங்களுக்குள் ஒரு உறவு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்