Skip to main content

2021-ஆண்டுக்குள் அணுஆயுத ஒழிப்பு!!காலம் நிர்ணயித்த கிம்!! நன்றி கூறிய டிரம்ப்

Published on 08/09/2018 | Edited on 08/09/2018

 

kim

 

2021-க்குள் அணுஆயுதங்களை ஒழிக்க வடகொரியா காலம் நிர்ணயத்துள்ளதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவிக்க அதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

 

சர்வேத அளவில் உற்றுநோக்கப்படும் சந்திப்பாக வடகொரியா அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு கடந்த ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பு அணு ஆயுத ஒழிப்பை வடகொரியா செயல்படுத்த வேண்டும் என்ற சமரசத்திற்கு  வழிவகுப்பதாக கருதப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு அணு ஆயுத ஒழிப்பு குறித்த எந்த தீர்க்கமான முடியும் எடுக்கப்படாத நிலையில் வடகொரிய அதிபர் கிம் தென்கொரிய அதிகாரிகளுடன் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 18 -ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 2021-ஆம் ஆண்டுக்குள் அணு ஆயுத ஒழிப்பை கொண்டுவர இருப்பதாக கிம் வெளிப்படுத்தியுள்ளார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.   

சார்ந்த செய்திகள்