Published on 02/10/2020 | Edited on 02/10/2020
![usa president trump covid test for positive](http://image.nakkheeran.in/cdn/farfuture/fkI-_azYiLQ7S7vvVhAO0Fr4LM4lTfaC8LYwpilBY5Q/1601616762/sites/default/files/inline-images/trump-income-tax%20%282%29.jpg)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா இருப்பது உறுதியானது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் கரோனா மருத்துவ பரிசோதனை செய்த நிலையில், கரோனா உறுதியானது. இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். கரோனா உறுதியான தகவலை அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
உலகளவில் கரோனா வைரஸால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் அந்நாட்டில் சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.