Skip to main content

வேகமாக பரவும் புதிய வகை கரோனா! - எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அரசாங்கங்கள் அறிவுறுத்தல்...

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
engalnd

 

இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்தநாட்டில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரவி வந்த கரோனா வைரஸை விட, இந்த புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், முந்தைய கரோனா வைரஸை விட இது தீவிரத்தன்மை குறைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையெனவும் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் வரையில், இந்த இந்த புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது மிகவும் கடினம் எனவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமெனவும் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

புதிய வகை கரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இத்தாலி நாட்டில் ஒருவருக்கும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்து சென்று திரும்பியவர் என இத்தாலி நாடு தெரிவித்துள்ளது.

 

இதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவி, தென்னாப்பிரிக்காவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார். மேலும் அவர், மக்கள் புதிய வகை கரோனா தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை ஆனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்