அமெரிக்க மென்பொருள் நிறுவனமான காக்னிசண்ட் நேற்று, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் கணக்கை அறிவித்தத்து. அதில் ஆலோசனை மற்றும் பணியமர்த்துதல் பிரிவின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 648 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் வந்துள்ளதாக அறிவித்தது. அதேசமயம், இது கடந்த வருடம் இதே காலாண்டில் 18 மில்லியன் அமெரிக்க டாலராக இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்ததுள்ளது. அதேபோல் மொத்த வருவாயில் கடந்த ஆண்டு 3.83 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும் அது இந்த வருடம் 4.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது என்றும் அறித்துள்ளது. மேலும் இதில் அந்நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பது குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைமை செயல் அதிகாரியாக இருக்கும், பிரான்சிஸ்கோ டி’சோசாவின் பதவிகாலம் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் கடந்த 2007-ம் வருடம் முதல் அப்பதவியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு பதிலாக தற்போது வோடாஃபோன் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பிரையன் அம்ஃப்ரிஸ் (Brian Humphries) என்பவரை காக்னிசண்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.