உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்திற்கு 'மெட்டா' என்ற புதிய பெயரை அதன் நிறுவனரான மார்க் ஜூக்கர் பெர்க் சூட்டியுள்ளார். எதிர்கால இணையதளம் மெய்நிகர் உலகமாக மாறும் என்பதால் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
'மெட்டா' என்பதற்கு அப்பால் என்று அர்த்தம். பிரபஞ்சத்தை ஆங்கிலத்தில் அழைக்கும் யுனிவர்சல் என்ற சொல்லின் பின் பெயரான வெர்சை சேர்த்து இணையத்தில் பயன்படுத்தப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் 'மெட்டா' வெர்ஸ் என அழைக்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிற்கு 'மெட்டா' என்ற பெயரைச் சூட்டியிருப்பதாக மார்க் ஸூக்கர் பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்கள், உறவினர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் உரையாடும் அனுபவத்தைப் பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்க மார்க் ஸூக்கர் பெர்க் திட்டமிட்டுள்ளார். அதேசமயம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசென்ஜர் போன்ற செயலிகளின் பெயர்கள் அப்படியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.