Published on 17/03/2022 | Edited on 17/03/2022

அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பைத் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் குறைத்துள்ளது.
முன்னதாக, 2022- 2023 ஆம் நிதியாண்டில் இந்தியா 9.5% வளர்ச்சியடையும் என மூடிஸ் கணித்திருந்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் சூழ்நிலையால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம், வேளாண் விளைப்பொருள் ஏற்றுமதி பாதிப்பு ஆகியவற்றை இந்தியா சந்திக்க நேரிடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த நிதியாண்டின் வளர்ச்சிக்கான கணிப்பை 9.5%- லிருந்து 9.1% ஆக குறைத்துள்ளதாகவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.