சீனாவின் பிரபலமான மெய்ஸு நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அடுத்தமாதம் அறிமுகம் செய்ய உள்ளது. அனைத்து ஆண்ட்ராய்டு போன்கள் போன்று எல்லாரும் உபயோகப்படுத்தும் இந்த போனில் ஒன்றே ஒன்று மட்டும் சற்று வித்தியாசம். வால்யூம் ஏற்றவோ, குறைக்கவோ, போனை ஆப் செய்யவோ பட்டன்கள் கிடையாது. அதற்கு பதிலாக போனின் பக்கவாட்டில் இந்த பட்டன்களுக்கு பதிலாக தொடுதிரையாகவே இருக்கும். அதன் மூலம் சுவிட்ச் ஆப், வால்யூம் கன்ட்ரோல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதுபோல ஹெட்போன் ஜாக், ஸ்பீக்கர், சார்ஜிங் போர்ட் கிடையாது. ஸ்பீக்கருக்கு பதிலாக பீஸோ தொழிநுட்பம் மூலம் ஆடியோ கேட்கலாம். மேலும் வயர்லெஸ் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்ய வேண்டும். அது போல சிம் கார்ட் போடுவதற்கும் இந்த போனில் இடம் இல்லை. அதற்கு பதில் ஐ.எம்.இ.ஐ எண்ணை கொண்டு ஈ சிம் வசதியை ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். இந்த போன் பெரும்பாண்மை இளைஞர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .